unai patum pozhuthellam aananthame

உனை பாடும் பொழுதெல்லாம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உனை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே
நினைவாக உணவாகி உயிராகியே
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ – 2
சபமப கமரிக சரிசநி – 2
சாநி பமபநி சச
சச நிசச நிரிரிரிச நிசநி
சாநி பமபத பப
பம பபபம தத பமக
1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே
நீதானே என்னை நினைத்தாய் – 2
என் பெயரை உன் கையில் அழியாத நினைவாக
நீதானே பொறித்து வைத்தாய்
எனை விட்டு விலகுவதில்லை நீ
என்னை கைவிடுவதுமில்லை
கண் இமையாக சிறகாலே அணைத்தென்னை காக்கின்ற
உனை பாடும் பொழுதெல்லாம்
பபபத பமகரி சரிசரிநிச
சரிகமப தப மகரி கமப – 2
மபதநிச கரிசநி ரிசநித பதநிச
கரிசநித ரிசநிதப சநிதபம
தபநித சரிநிச
நிசகரி தநிரிநி தபமகரி
ரிரிககமமதத ககமமததநிநி
மமதத நிநிரிரி சநிதப
2. சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உன் வார்த்தைகள் – 2
இமை காக்கும் விழிபோல நிதம் சூழ்ந்து எனை காக்கும்
உன் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் நான்
பயம் கொண்ட வேளைகளில்
வழி துணையாக துயர் போக்கும்
மருந்தாக வருகின்ற
உனை பாடும் பொழுதெல்லாம்
உனை பாடும் பொழுதெல்லாம் பாடல் வரிகள், Unai Paadum Poluthellaam Lyrics