unadhearea unnadha belan tharumea

உன்னதரே உன்னத பெலன் தாருமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னதரே உன்னத பெலன் தாருமே – Unnatharae Unnatha Belan Thaarumae
உன்னதரே உன்னத பெலன் தாருமே
உன்னதங்களில் உம்மோடுறவாடிட
உள்ளம் ஏங்கிடுதே
ஆயிரங்களில் சிறந்தோரே
ஆத்துமாவின் நேசர் அவரே
ஆபத்தில் என் தோழரும் நீரே
ஆடிப்பாடி துதிப்பேன் என்றும்
ஏழை என்னை ஆசையுடனே
நேசர் இயேசு தேடி வந்தாரே
அளவற்ற கிருபையாலே
அளவின்றி நிரப்பினாரே
தேவசாயலாக மாறியே
தேவ அன்பால் நிறைந்திருப்பேன்
ஆத்ம நேச உச்சிதங்களை
நேசருக்கு ஈந்திடுவேன்
எண்ணிறந்த தூதர்களோடு
விண்ணில் நின்று போற்றி மகிழ்வேன்
கோடி கோடி ஆண்டுகளாக
தேவ லோகில் வாழ்ந்து சுகிப்பேன்