Ummodu Vazhum Vaalkkaithanae song lyrics

உம்மோடு வாழும் வாழ்க்கைதானே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மோடு வாழும் வாழ்க்கைதானே
எந்நாளும் என் இன்பமே
உம்மோடு பேசும் நேரங்கள்தானே
எந்நாளும் என் மகிழ்ச்சியே
நான் செய்கின்ற யாவும்
பலனாக மாறும் அதிசயம் உம்மிடத்திலே -2
ஒரு சொட்டுக்கண்ணீர் பலகோடி நன்மையாய்
மாறும் உம் சமுகத்திலே
ஒரு நிமிட முழங்கால் அறியாத உயரத்தில்
சேர்க்கும் உம் பாதத்திலே
உம் சமுகம் ஒன்றே வேண்டும்
பாதம் ஒன்றே போதும் என்றென்றும் என் வாழ்விலே-2
தீமையை நன்மையாய் துன்பத்தை இன்பமாய்
மாற்றிடிடும் உம் வார்த்தையே
குறைவெல்லாம் நிறைவாய்
இருளெல்லாம் வெளிச்சமாய்
மாற்றிடும் உம் இரத்தமே
உம் வார்த்தை என்னைத் தேற்றும்
இரத்தம் என்னை மாற்றும் சோர்வான நேரங்களில்-2
பெலவீனன் என்னை பெலனாக மாற்றி
பயன்படுத்தும் அபிஷேகமே
அற்பமாம் என்னை ஆவியால் நிரப்பி
அழகாக்கும் பிரசன்னமே
உம் அபிஷேகத்தால் நிரப்பும்
பிரசன்னத்தால் மூடும் ஒவ்வொரு அசைவிலுமே -2