Ummodu Uravaadum Naeram

உம்மோடு உறவாடும் நேரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மோடு உறவாடும்
நேரம் எனக்குப் போதும்
இயேசுவோடு உறவாடும்
நேரம் எனக்குப் போதும்
இயேசைய்யா (2)
நீர் போதும் இயேசைய்யா
1. என் கிருபை போதும் என்று சொன்னீர் ஐயா
நிறைவான கிருபை தாரும் ஐயா
உம் கிருபை தானே என்னை நடத்தும்
கிருபை போதும் ஐயா – உம்மோடு
2. என் சமூகம் முன் செல்லும் என்றீரைய்யா
உம் சமூகம் எனக்கு வேண்டுமைய்யா
உம் சமூகம் இல்லாமல் என்னால் எதுவும்
செய்ய இயலாதைய்யா – உம்மோடு
3. என் மகிமை காண்பிப்பேன் என்றீரைய்யா
உம் மகிமை எனக்கு காண்பியுமே
உம் மகிமைதானே எங்களைக் காக்கும்
மகிமை போதுமைய்யா – உம்மோடு
4. உம் அன்பு எனக்கு போதுமைய்யா
அன்பின் ஆவியாலே நிரப்பும் ஐயா
உம் அன்பில் என்றும் நிலைத்திருக்க
கிருபை தாரும் ஐயா – உம்மோடு