Ummalandri ennaal enna mudiyum song lyrics

உம்மாலன்றி என்னால் என்ன

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மாலன்றி என்னால் என்ன முடியும்
உம் துணையின்றி யாரால் வாழ முடியும் – ( 2 )
பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாற
உம் ஆவியினால் என்னை அபிஷேகியும்
பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாற
உம் அக்கினியால் இன்றே அபிஷேகியும்
இயேசுவே என் இயேசுவே
இயேசுவே எந்தன் இயேசுவே – ( 2 )
1.கண்மணி போல என்னை காக்கும் தேவா
காலமெல்லாம் உடன் இருக்கும் நாதா – ( 2 )
பாவங்கள் நீங்கிட சாபங்கள் தொலைந்திட
உம் பாதம் இன்றே நான் சரணடைந்தேன்
பாவங்கள் நீங்கிட சாபங்கள் தொலைந்திட
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
2.சாத்தானின் சதிகள் தினமும் வென்றிட
தூயோனாய் உம்மில் என்றும் வாழ்ந்திட – ( 2 )
கர்த்தர் என் மேய்ப்பர் குறைவொன்றும் இல்லை
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
கர்த்தர் என் மேய்ப்பர் குறைவொன்றும் இல்லை
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்