Ummalae Thaanae Lyrics

உம்மாலே தானே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மாலே தானே உயிர் வாழ்கிறேன்
உம்மாலே தானே நிலை நிற்கிறேன் -2
நீர் செய்த நன்மைக்கே பாத்திரன் நான் அல்ல
ஆனாலும் என்னை கண்டீரே ….ஓ
உம்மை போல தேவன் இல்லையே
அன்பிற்கு ஈடே இல்லையே
உம்மை போல தேவன் இல்லையே
ஆதவன் என்று தள்ளின போதிலும்
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றிவிட்டீரே -2
உனக்கெதிராய் வரும் ஆயுதம் வாய்க்காதே
என்றுறைத்தவரே என்னோடு இருக்கின்றீர் -2
என்னோடு இருக்கின்றீர்
உம் அன்பிற்கீடு இல்லையே ..ஓ
உம்மை போல தேவன் இல்லையே -2
உம்மை விட்டு தூரம் நான் விலகின போதிலும்
என்னை தேடி வந்து தோழினில் சுமந்தீரே -2
அடித்தாலும் அரவணைக்கும் அன்புள்ள தகப்பனே
ஆலோசனை தருகின்ற உண்மையுள்ள நண்பன் நீர் -2
உம் அன்பிற்கீடு இல்லையே ..ஓ
உம்மை போல தேவன் இல்லையே -2