ummai vitave matten – Ummai Vidave Maaten

உம்மை விடவே மாட்டேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை விடவே மாட்டேன் – Ummai Vidave Maaten
உம்மை விடவே மாட்டேன் -2
ஆசிர்வதியும் அன்பின் தேவா
ஆசிர்வதியும் இயேசு தேவா-2
1.தகப்பனே உந்தன் அன்பு
கருவில் என்னை கண்டதே
உமக்காக பிரித்தெடுத்து
உயர்த்த சித்தம் கொண்டதே…2
உணர்கிறேன் பிடிக்கிறேன்
உந்தன் பாதம் இன்று..2
உம்மை விடவே மாட்டேன் -2
ஆசிர்வதியும் அன்பின் தேவா
ஆசிர்வதியும் இயேசு தேவா-2
2. எத்தனாய் வாழ்ந்த நாட்கள் எத்தனையோ உண்டு
சுத்தனாய் என்னை மாற்றும்
தந்துவிட்டேன் இன்று
உடைத்திடும் வனைந்திடும்
உந்தன் கரம் கொண்டு….2
விடமாட்டேன் விடமாட்டேன்
உம் பாதம் விடமாட்டேன்
விலையேர பெற்றவரே
உம்மை என்றும்
விடமாட்டேன் -2 விடமாட்டேன் -2