Ummai thuthiththu thuthiththiduven

உம்மை துதித்து துதித்திடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை துதித்து துதித்திடுவேன்
உம்மில் மகிழ்ந்து மகிழ்ந்திடுவேன்-2
உம்மை துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்
துயரங்கள் மறந்திடுவேன் -2
1.கஷ்டத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரே
என் துன்பத்தின் நேரங்களில் என்னை கை தூக்கி எடுத்தவரே -2
உதவா என்னை தேடி வந்தீரே
உம் கரத்தால் உயர்த்தினீரே -2 – உம்மை துதித்திடுவேன்
2.துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரே
என் துன்பத்தின் நேரங்களில் நீர் இன்பமாய் மாற்றினீரே-2
யாருமில்லாத நேரத்திலே எபிநேசராய் நடத்தினீரே
யாருமில்லாத நேரத்திலே எபிநேசராய் நடத்தினீரே – உம்மை துதித்திடுவேன்
3.இருதயம் அறிந்தவரே முன் குறித்து வைத்தவரே
என் இருதயம் அறிந்தவரே முன் குறித்து வைத்தவரே-2
தாயை போல தேற்றினீரே தகப்பனாய் என்னை சுமந்தீரே
தாயை போல தேற்றினீரே தகப்பனாய் என்னை சுமந்தீரே – உம்மை துதித்திடுவேன்