ummai pukazhnthu pati uyarththi enrum

உம்மை புகழ்ந்து பாடி
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை புகழ்ந்து பாடி உயர்த்தி என்றும்
மகிமை செலுத்துவேன்
நீரே தேவன் நீரே மீட்பர்
நீரே எந்தன் தஞ்சமே
பாதாளம் நோக்கியே சென்ற ஆத்துமாவை
கிருபையை கொண்டு நீர் இரட்சித்தீரே
உந்தன் ஆவி கறைகள் நீக்கி
மகிமையில் என்னை சேர்த்திடுமே
பெலவீன நேரத்தில் பெலத்தால் இடைக்கட்டி
உற்சாக ஆவி என்னைத் தாங்க செய்தீர்
உந்தன் கோலும் உந்தன் தடியும்
என்னை தேற்றி நடத்தினதே
போக்கிலும் வரத்திலும் செல்லும் இடமெல்லாம்
உந்தன் சமூகம் முன் சென்றதே
உந்தன் கிருபை என்னை சூழ்ந்து
எல்லா தீங்கிற்கும் விலக்கினதே
என் திட்டங்கள் வகுத்தவர் தேவைகள் அறிந்தவர்
நேர்த்தியாய் என்றும் நீர் நடத்தினீர்
எந்தன் வாழ்வின் தேவைகள் யாவும்
யெகோவா யீரே பார்த்துக்கொள்வீர்