ummai pata, pukazha, vazhi thetinen

உம்மை பாட புகழ வழி தேடினேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை பாட, புகழ, வழி தேடினேன்
உம்மை நெருங்க, என்னை கொடுக்க தேடி ஓடி வந்தேன்.
என்னை நெருங்கி அருகில் வந்தீர்
அரவணைத்து அணைத்து கொண்டீர்
உம் நாமமே உயர்ந்ததே
அன்பால் மூடி மறைத்து கொண்டீர்
உம் சித்தம் செய்ய வைத்தீர்
உம் சமூகமே என் முன்னே-2
உலகை வெறுக்க, உம்மை துதிக்க, வழி தேடினேன்
உம்மை நினைக்க, நன்றி செலுத்த, தேடி ஓடி வந்தேன்-2
என்னை நெருங்கி அருகில் வந்தீர்
நன்மைகளால் முடி சூடினீர்
உம் நாமமே உயர்ந்ததே
உம் வார்த்தையிலே நிறைத்து,
வாக்குத்தத்தங்களை கொடுத்து
உயர்த்தின எந்தன் நேசரே -2
உம் அன்பை சொல்ல, புகழ, மொழி இல்லையே
நீர் என்மேல் வைய்த்த, உம் கிருபை அளவில்லாததே-2
என்னை தாயின் கருவில் கண்டீர்
முன் குறித்து பெயர் சூடினீர்
என்னை காத்திடும் உந்தன் நேசமே
என் கரத்தை இறுக்கி பிடித்து
விலகாமல் அருகில் இருந்து
வழி நடந்திடும் என் மேய்ப்பர்-2