Ummai Nesikkum Pothellam

உம்மை நேசிக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை நேசிக்கும் போதெல்லாம்
நான் என்னையே மறக்கின்றேன்
உம் அன்பை நினைக்கிறேன் – நான் என்னையே தருகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா (4)
1.நேசத்தின் மிகுதியால் – என்
நெஞ்சமெல்லாம் பொங்குதய்யா
நித்தமும் நான் பாடிடுவேன்
என் நேசருக்காய் (இயேசுவுக்காய்) வாழ்ந்திடுவேன்
வாழ்க ராஜா இயேசு ராஜா (4)
2.வேதத்தின் வெளிச்சமே – தேவ
நேசத்தின் உச்சிதமே
வாக்குத்தத்தம் தந்தவரே
நிறைவேற்றியே முடிப்பவரே
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
3.உலகத்தின் இன்பங்களை – நான்
உதறி தள்ளி விட்டேன்
நேசக்கரம் நீட்டி என்னை -உம்
பாசத்தோடு அனைத்தீரே
அல்லேலூயா ஆல்லேலூயா (4)
உம்மை நேசிக்கும் போதெல்லாம்
இயேசு ராஜா வாரும் ராஜா
மணவாளா மாரநாதா (2)