Ummai Neasikkirean Yesuvae song lyrics

உம்மை நேசிக்கிறேன் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா-உம்மை
ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா (3)
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் -2
பெலவீனம் வியாதி எனைச் சூழும் போது
பரிகாரி நீர் போதுமே பரிசுத்தர் நீரே
பாரில் வந்ததால் பாவங்கள் பறந்தோடுதே
பரலோகில் நான் சேர வழியானீரே என் இரட்சகா என் தேவா -2
நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர்
தேவா நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே
என்னை நினைவில் கொள்ளும் நாதனே
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ -2 என் இரட்சகா என் தேவா -2