ummai maranthoom pavangkal – Ummai Marandhom Paavanagal

உம்மை மறந்தோம் பாவங்கள்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை மறந்தோம் பாவங்கள் – Ummai Marandhom Paavanagal
உம்மை மறந்தோம் பாவங்கள் செய்தோம்
தோரோகியாய் வாழ்ந்தோமையா (2)
நிர்பந்தமான மனிதர்கள் நங்கள்
மனமிறங்குமையா (2)
தேவனே என் தேவனே மனமிறங்குமய்யா
தேவனே என் ஜீவனே மனமிறங்குமையா
நிர்பந்தமான மனிதர்கள் நங்கள்
மனமிறங்குமையா (2)
1. எல்லாம் இழந்தும் கைவிடப்பட்டும்
அமிழ்ந்து போகிறோமே
ஒன்றுமில்லை என்னில் ஒன்றுமில்லை
கிருபையால் தங்கிடுமே
2. இந்த ஸ்தலத்திலே செய்யப்படும்
ஜெபத்தை கேட்டருளும்
என் கூக்குரலின் சத்தத்திற்கு
உம் செவிகளை திறந்தருளும்
3. உம் நாமமுடைய உமது ஜனங்கள்
எங்களை தாழ்த்துகிறோம்
கண்ணீரினால் உம் பாதத்தை
கழுவி துடைக்கிறோம்
4. தேசம் எங்கும் உமது ஜனங்கள்
புலம்பி தவிக்கிறார்கள்
மனமிறங்கும் மனமிறங்கும்
ஒரு விசை மனமிறங்கும்