Ummai Appanu Kupidathan Aasai

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அப்பான்னு கூப்பிடவா?
உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை
உம்மை அம்மான்னு கூப்பிடவா?
அப்பான்னு கூப்பிடுவேன் – உம்மை
அம்மான்னு கூப்பிடுவேன்
கருவில் என்னை (காத்தத) சுமந்ததப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்வதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும் – உம்மை
கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா
அம்மான்னு சொல்லணும்
விண்ணப்பத்தைக் கேட்டதப் பார்த்தா
அப்பான்னு சொல்லணும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மான்னு சொல்லணும்
உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
உம்மை அப்பான்னு சொல்லணும் – உம்மை