umakaagavae uyir vaazha

உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன்
உமக்காகவே ஊழியம் செய்திடஅர்ப்பனித்தேன்
அர்ப்பனித்தேன் இயேசுவே அர்ப்பனித்தேன்
உமக்காகவே நான் அர்ப்பனித்தேன்
அர்ப்பனித்தேன் இயேசுவே அர்ப்பனித்தேன்
உமக்காகவே நான் அர்ப்பனித்தேன்
1. அறுவடை அதிகம், ஆட்களோ கொஞ்சம்
உம் ஏக்கத்தை நான் அறிவேன்
பலகோடி மக்கள், பரலோகம் சேர்ந்திட
அயராது உழைத்திடுவேன் – 2
உம் நேசத்தால் சோகமானேன்
உம் சித்தத்தை செய்திடுவேன்
2. யாரை நான்அனுப்புவேன், நமது காரியமாய்
உம் சத்தத்தை நான் கேட்டேன்
இதோ அடியேன், இருக்கின்றேன் தேவா
என்னையும் அனுப்பிடுமே – 2
3. கோதுமை மணிபோல் மடிந்து பலன்தர
எப்போதும் விரும்புகிறேன்
இனி நான் அல்ல, இயேசுவே என்னில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்