Um Siragugal Nizhalil

உம் சிறகுகள் நிழலில்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்
என்னை அரவணைத்திடு இறைவா — (2)
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் — (2)
உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்
என்னை காத்திடு என் இறைவா
பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்
மன்னிப்பில் பனி போல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் — (உம் சிறகுகள்…)
வலையினில் விழுகின்ற பறவை அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள் மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை — (உம் சிறகுகள்…)