um samugam vanthu nirkirean

நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் சமுகம் வந்து நிற்கிறேன் நான்
உம் சமுகம் வந்து நிற்கிறேன்
உம் சாயலாக மாறத்தானையா இன்று
உந்தன் முன்பாய் வந்து நிற்கின்றேன்
1. மண்ணான என்னை நீர் குனிந்தெடுத்தீர்
விண்ணவர் உந்தன் சுவாசம் எனக்குள் உண்டாக்கினீரே
உம் சாயலாகத் தானே என்னை உண்டாக்கினீரே
உம் ரூபமாகத் தானே என்னை உருவாக்கினீர் -2
2. அனைத்தையும் ஆளுகை செய்ய என்னைப் படைத்தீர்
அன்பாய் நீர் ஒரு கனியை தொடாதென்றீர்
உம் வார்த்தை மீறி நானும் பாவம் செய்ததாலே
நான் சாபமாகி போனேன் தேவ சாயலை இழந்தேன் நான்
3. சாபமான என்னை நீர் பாவத்தில் விடவில்லை
என் பாவம் போக்க பரலோக தேவன் பூமிக்கு வந்தீர்
என் அக்கிரமங்கள் ஏற்றீர் என் மீறுதலை சுமந்தீர்
என்னை சாயலாக மாற்ற உம் ஜீவனையும் தந்தீர்
4. குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன்
குறித்தீரே என்னை தெரிந்து கொண்டீர்
என்னை நீதிமானாக மாற்றுபவரும் நீரே
உந்தன் வருகையில் என்னை சேர்த்துக் கொள்வீரே