Um Pirasannam Enna Aanantham

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் – Um Pirasannam Enna Anantham
உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
உம் சமூகம் எந்தன் வாஞ்சை
ஸ்தோத்திரம் என் தேவனே
ஸ்தோத்திரம் என் தூயனே
அபிஷேக தைலம் ஆண்டவர்
அடியேனுக்கு அருளினாரே
பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க
பரிசுத்தர் என்னை அபிஷேகித்தார்
மாமிசமான யாவர் மேலும்
உன்னத ஆவியை ஊற்றுவேன் என்றார்
தாகமுள்ளவர் அனைவரும்
தேவ ஆவியை பெறுகின்றனர்.
அபிஷேகம் நம்மை மகிழ்விக்கும்
தேவனின் அன்பில் பெலப்படுத்தும்
தேவ வசனத்தை போதிக்கும்
தெய்வீக பாதையில் வழிநடத்தும்