um nanmaikal aassaryam enakku – Um Nanmaigal Acharyam enaku

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku
உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு
நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு
என் ஆச்சர்யமே என் அதிசயமே
என்னை படைத்த பிரமிப்பையே நீர் எந்தன் சொந்தமே
1.என் அழுகையின் கண்ணீரையும்
அந்த களிப்பாய் மாற்றினீரே
என் வாழ்க்கையை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்ந்தீரே – ஆச்சர்யமே
என்னை அழைத்தவர் நீரே
என்னோடு இருப்பவரே
என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே
என் ஆத்ம நேசரே
என்னை வாழ வைப்பவரே
என்னை நடத்தி செல்பவரே
என் மனம் சோர்ந்தாலும் உம் நேசத்தால் தேற்றுவீரே
என் ஜீவ காலமெல்லாம் உன் கிருபை போதுமே
உம் மகிமையை பார்க்கணுமே
உம் பிரசன்னத்தில் மூழ்கனுமே