um kai en aaththumavai amara seyyum

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.

உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும்
உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்
பறந்து காக்கும் பட்சி போல
என்னை காக்கும் தேவனே
பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
தஞ்சம் கொண்டேனே
இயேசுவே…….
உம்மை விட்டு நான் எங்கே செல்லுவேன்
இயேசுவே…….
உம்மை விட்டு நான் யாரை தேடுவேன்
மனம் திறந்து உணர்ந்து நான்
என்னை உமக்கு தந்தேன்
வழி பிறந்து மகிழ்ந்து உம்மை
மீண்டும் நெருங்கினேன்
சிலுவையை நினைக்க செய்திட்டீர்
என் புலம்பலை மறக்க செய்திட்டீர்