Um Irathamea Um Irathamea

உம் இரத்தமே உம் இரத்தமே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae Um Rathamae
உம் இரத்தமே உம் இரத்தமே
சுத்தம் செய்யுமே
உம் இரத்தமே என் பானமே
1. பாய்ந்து வந்த நின் இரத்தமே
சார்ந்தோர்கட்கு அடைக்கலமே
பாவியின் நேசர் பாவி என்னை
கூவி கழுவினீர் என்னை
2. நேசர் சிலுவை சத்தியம்
நாசம் அடைவோர்க்கு பைத்தியம்
இரட்சிப்படைவோர் சத்தியம்
நிச்சயம் காப்பார் நித்தியம்
3. நின் சிலுவையில் சிந்திய
வல்லமையுள்ள இரத்தத்தினால்
என் பாவத்தை பரிகரித்தீர்
அன்புள்ள தேவ புத்திரா
4. பன்றி போல் சேற்றில் புரண்டேன்
நன்றி இல்லாமலே திரிந்தேன்
கரத்தால் அரவணைத்தீர்
வரத்தால் ஆசீர்வதித்தீர்
5.விழுங்கப் பார்க்கும் சாத்தானை
மழுங்க வைத்தீர் அவனை
புழங்காமல் போக்கினானே
களங்கமில்லா கர்த்தரே
6. ஐயனே உமக்கு மகிமையும்
துய்யனே துதி கனமும்
மெய்யனே எல்லா வல்லமையும்
உய்யோனே உமக்கல்லேலூயா