um‌ aaviye en‌ pelan‌

உம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்‌ ஆவியே என்‌ பெலன்‌
உம்‌ வார்த்தையில்‌ என்‌ ஜீவன்‌
முழு மனதோடு ஆராதிக்கின்றோம்
மன நிறைவோடு ஆராதிக்கின்றோம்‌
தகப்பனும்‌ தாயும்‌ என்னை
கைவிட்டாலும்‌
இருள்‌ பள்ளத்தாக்கின்‌ தனியாய்‌
நான்‌ நடந்தாலும்‌
தடைகளை உடைப்பவர்‌ முன்செல்வார்‌
மதில்களை தகர்ப்பவர்‌ வழிசெய்வார்‌
கடலையும்‌ பிளப்பவர்‌ பதில்‌ அளிப்பார்‌
என்னை தாங்கிடும்‌ தகப்பனவர்‌
என்னை தப்புவிக்கும்‌ தாயுமாவார்‌
எரிகோபோல எதிரிகள்‌
வாழியை அடைதாலும்‌
என்னை அழித்திட நொருகிட
திட்டங்கள்‌ பல போட்டாலும்‌
தடைகளை உடைப்பவர்‌ முன்செல்வார்‌
மதில்களை தகர்ப்பவர்‌ வழிசெய்வார்‌
கடலையும்‌ பிளப்பவர்‌ பதில்‌ அளிப்பார்‌
என்னை தாங்கிடும்‌ தகப்பனவர்‌
என்னை தப்புவிக்கும்‌ தாயுமாவார்‌
நம்பின மனிதன் நன்றி
இல்லாமல் போனாலும்
காரணமின்றி வெறுத்து
நகைத்து பேசினாலும்
தடைகளை உடைப்பவர்‌ முன்செல்வார்‌
மதில்களை தகர்ப்பவர்‌ வழிசெய்வார்‌
கடலையும்‌ பிளப்பவர்‌ பதில்‌ அளிப்பார்‌
என்னை தாங்கிடும்‌ தகப்பனவர்‌
என்னை தப்புவிக்கும்‌ தாயுமாவார்‌