Ullankaiyilae Ennai

உள்ளங்கையிலே என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உள்ளங்கையிலே என்னை
வரைந்து கொண்டீரே
வெறும் மண்ணான என்னை
தேடி வந்தீரே
என் தூசி நீங்க தட்டி
என் காயம் எல்லாம் கட்டி
உங்க அன்பின் கரத்தினால்
என்னை கட்டி அணைத்தீரே
இயேசுவே உங்க முகத்தை பார்த்து
இயேசுவே உங்க மார்பில் சாய்ந்து
இயேசுவே உங்க தோளில் ஏறி
உரிமையாய் பேசுவேன் – 2
1.நீர் சொன்ன வார்த்தைகள்
ஒன்றுமே மாறாது
காலதாமதம் என்றாலும்
கலங்கி நான் போவேனோ
2.எனக்கொரு பந்தியை
தருவேன் என்றிரே
லாபம், நஷ்டமோ என்றாலும்
பின்தொடர்வேனே நான்
3.தாய் என்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பேனோ
உறவுகள் வெறுத்தாலும்
உமதன்புக்கு இணையில்லயே
உள்ளங்கையிலே என்னை பாடல் வரிகள், Ullankaiyilae Ennai Lyrics