ularntha elumpukal uyir ataiyum um aaviyin vallamaiyal kaloonri senaiyay ezhumpi nirkum um varththaiyin athikaraththal sukaveenangkal sukamataiyum aazhamana um thazhumpukalal pelaveenangkal

உலர்ந்த எலும்புகள் உயிர் அடையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உலர்ந்த எலும்புகள் உயிர் அடையும் உம் ஆவியின் வல்லமையால் காலூன்றி சேனையாய் எழும்பி நிற்கும் உம் வார்த்தையின் அதிகாரத்தால் சுகவீனங்கள் சுகமடையும் ஆழமான உம் தழும்புகளால் பெலவீனங்கள்
பெலனடையும் உம் பரிபூரண பெலத்தால்
நீரே கர்த்தர் நீரே கர்த்தர் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் நீரே கர்த்தர் நீரே கர்த்தர் மனநிறைவோடு உயர்த்திடுவேன் – 2
1.சிங்க கெபிக்குள் விழுந்தாலும் அக்கினி சூலையில் நின்றாலும் சத்துரு சேனையாய் சூழ்ந்தாலும் எரிகோவின்
மதில்கள் தடுத்தாலும்
என்னை காப்பவர் நீர்தானையா துணையாய் நிற்பவர் நீர்தானையா
யுத்தத்தில் கேடகம் நீர்தானையா
தடைகளை தகர்பவர் நீர்தானையா
-நீரே கர்த்தர்
2.நம்பிக்கை இல்லா வேளையில் நீர் தான் எனது நம்பிக்கையே கைவிடப்பட்ட காலங்களில் உம் நீதியின் வளக்கரம் தாங்கியதே உம்மை கூப்பிடும் யாவருக்கும் செவியை அடைக்காமல் திறப்பவரே உம்மை தேடிடும் யாவரையும் கண்களில் கனிவோடு காண்பவரே
-நீரே கர்த்தர்
உலர்ந்த எலும்புகள் உயிர் அடையும் உம் ஆவியின் வல்லமையால் காலூன்றி சேனையாய் எழும்பி நிற்கும் உம் வார்த்தையின் அதிகாரத்தால் சுகவீனங்கள் சுகமடையும் ஆழமான உம் தழும்புகளால் பெலவீனங்கள்
பெலனடையும் உம் பரிபூரண பெலத்தால்
நீரே கர்த்தர் நீரே கர்த்தர் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் நீரே கர்த்தர் நீரே கர்த்தர் மனநிறைவோடு உயர்த்திடுவேன்