udaintha vidum palingu paathiram

உடைந்து விடும் பளிங்கு பாத்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உடைந்து விடும் பளிங்கு பாத்திரம்
நம் ஜீவியம் எவர்க்கும் பாடமாகும்
கீழே விழுந்தால் உடையும் - அது
மிதிபட நேர்ந்தாலும் நொறுங்கும்
1. கை தளர்ந்தாலே தவறும் பாத்திரம்
அதுபோல் மனிதரின் ஜீவியம்
மானிடர் வாழ்வில் ஜீவிய நாளும்
நிரந்தரமில்லா வாழ்வு
2. சிதறிய துண்டுகள் சேர்த்து இணைக்க
செய்யவும் அழகும் ஆகுமோ
கல்வாரி சிலுவை ஜீவ உறவை நாம்
உணர்ந்தால் மீண்டும் ஜீவியம்