ting ting tang mani

டிங் டிங் டாங் மணி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

டிங் டிங் டாங் மணி ஓசைகள் துள்ளிட
சிங் சிங் கேரல்கள் இன்னிசை கேட்டிட
மீட்பர் இயேசு பாலன் வருகையே கிறிஸ்மஸ்
விண்டர் சீசன் வெண்பனி தூவிட
ட்விங்கிள் ஸ்டார்கள் எங்கும் மின்னிட
அன்பின் தேவன் ஆனந்த வருகை கிறிஸ்மஸ்
புல்லணை மீது அழகாய் பூத்த ரோஜா
இந்த பூமியில் வந்த எங்கள் இயேசு ராஜா
நட்சத்திரம் மின்னும் இரவில் நம்பிக்கை நாயகனாக
பாலகனாய் தேவ மைந்தன் வந்தாரே
நாளைகளை நமதாக்கும் நம்பிக்கையே கிறிஸ்மஸ்
நம் ஆண்டவர் மேல் விசுவாசம் உறுதியாக்கும் கிறிஸ்மஸ்
எல்லோரும் ஒன்றாய் சேர்வோம் இயேசுவைப் பாடித் துதிப்போம்
அன்பைப் பகிர்ந்து வாழ்வோம் ஆடிப் பாடி மகிழ்வோம்
வேண்டுதல் கேட்டு நன்மை நமக்கே தருவாரே
நம் இல்லம் காத்து குறைகள் யாவும் தீர்ப்பாரே
குடையோடு நடந்திடும் கோடையில்
இன்ப அடைமழை பொழிவது போல்
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
பாலன் பூத்தாரே
புன்னகையால் பூமியினை அழகாக்கும் கிறிஸ்மஸ்
ஏழைகளும் பசியாறும் நல்விருந்து கிறிஸ்மஸ்
மண்ணில் மனித நேயம் மலரச் செய்யும் வேதம்
பொங்கும் தேவ கானம் எங்கும் சமாதானம்
பாவம் என்னும் இருளிலிருந்து மீட்பாரே
நம்மை பரிசுத்தமாக்கி தேவன் என்றும் காப்பாரே
குடையோடு நடந்திடும் கோடையில்
இன்ப அடைமழை பொழிவது போல்
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
பாலன் பூத்தாரே