Thuthithu Paadida Paathirar Neerae Lyrics

துதித்துப் பாடிட பாத்திரர் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதித்துப் பாடிட பாத்திரர் நீரே
துதித்துப் பாடிட பாடல் தந்தீரே
துதியின் மத்தியில் வாசம் செய்பவரே
துதியின் பாடலை எனக்குத் தந்தீரே
1.தூய்மையான தேவனும் நீரே
தூயவரை பாடிடும் பாடல் நீரே
இரட்சிப்பை தந்திடும் இரட்சகர் நீரே
இரட்சிப்பின் துதி கீதம் எனக்கு தந்தீரே
2.மகிமை நிறைந்த மன்னவன் நீரே
மகிபனை பாடிடும் பாடல் தந்தீரே
பரிசுத்த ஆவியின் வல்லமை நீரே
பரிசுத்த பாடல் எனக்கு தந்தீரே
3.ஜெயித்து எழுந்த ஜெய கிறிஸ்து நீரே
ஜெய துதி கீதங்கள் பாடச் செய்தீரே
கன்மலையான கிறிஸ்துவும் நீரே
கனமலை ராகங்கள் எனக்கு தந்தீரே