Thuthipathum Aananthamae

துதிப்பதும் ஆனந்தமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிப்பதும் ஆனந்தமே
துதி முழங்கும் தூயர் பரிசுத்தரே ஆ ஆ
தூயா நேயா குணாநிதியே
1.ஆதி சபையதிலே துதி முழங்க
ஆவி வந்தமர்ந்ததுவே ஆ ஆ
பலமுடன் சடுதியிலே
வானிலிருந்து பரன் முழக்கமுடன் வல்லமையாயுதித்தார் ஆ ஆ
வரவே நிறைவாய் நம் வீடதிலே
அக்கினி நாவருள அதி சுத்தர்கள்
அந்நிய பாஷை பேசிட ஆ ஆ
ஆவி வரம் ஆ வாக்குடனே
பக்தர்கள் மனங்களிக்க பகைவருள்ளம்
பரிகாசம் தான் தொனிக்க ஆ ஆ
பக்தி சக்தி இவ்வாவியிலே
நன்றியுடன் துதிப்பேம்
தேவாவி நமக்கீந்த பரா பரனை ஆ ஆ
நீதி கதி ஜீவனிவரே
ஆயிரமாயிரமாம் அதி சுந்தரன்
ஆகாயமே வருவார் ஆ ஆ
ஆயருடன் நாம் ஏகிடுவோம்