Thuthikkirom Ummai

துதிக்கிறோம் உம்மை வல்ல

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் உம்மை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனே
துந்துமி மாட்சிமைக்கே பிதாவே.
2. சுதனே யிரங்கும் புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியே,
சுத்தா ஜெபங்கேளும் பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே.
3. நித்ய பிதாவின் மகிமையில் நீரே
நிமலாவியினோ டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே உன்னத
நேயருக் கர்ச்சனையே ஆமென்.
துதிக்கிறோம் உம்மை வல்ல பாடல் வரிகள், Thuthikirom Ummai Valla pithavae lyrics