Thuthikal Seluthuvean Thooya vaalkkai

துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Thuthikal Seluthuvean Thooya vaalkkai – துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை
துதிகள் செலுத்துவேன்
தூய வாழ்க்கை தந்ததால்
அதிசயமாகவே என்னை
ஆட்கொண்டீர் இயேசுவே
கரை காணா என் வாழ்க்கையில்
கரை சேர்க்க வந்தீரையா
இருளான என் பாதையில்
ஒளியாக வந்தீரையா
அருள் தாரும் என் இயேசு ராஜா
திருக்கரத்தால் தாங்கி இனியும்
மனு பாவங்கள் போக்கவே
மனுக் கோலம் கொண்டீரையா
அனுகூல வாழ்வைத் தரவே
என்னை ஆதரித்தீரையா
தினந்தோறும் என் தியானம் நீரே
கன மகிமை யாவும் உமக்கே