Thungu Thungu Paalanae Christmas song lyrics

தூங்கு தூங்கு பாலனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தூங்கு தூங்கு பாலனே
கன்னி மரியின் சேயனே
தூயனே தூயனே
தூங்கு பாலனே – நீ
வெளியில் பனியும் பெய்திடுதே
மேனியெங்கும் நடுங்குதே
உமக்கும் மிகவும் குளிருதோ
என் உடையை தருகிறேன்
தேவ தூதரும் பாடிடவே
தேடியோடி வந்தனரே
என்றும் உம்மை புகழவே
என் குரலை தருகிறேன்
வான சாஸ்திரிகள் வந்தாயிற்றே
பரிசு யாவும் தந்தாயிற்றே
உமக்கு என்ன தருவேனோ
என் இதயம் தருகிறேன்