Thukka Paaraththaal Ilaiththu

துக்க பாரத்தால் இளைத்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal, Paamalaigal and Salvation Army Songs collection.

1. துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிக்
கொள்வார் வாராயோ?
2. அன்பின் ரூபகாரமாக
என்ன பாண்பித்தார்?
அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்.
3. அவர் சிரசதின் கிரீடம்
செய்த தெதனால்?
ரத்தினம் பொன்னாலுமல்ல,
முள்ளினால்.
4. கண்டு பிடித் தண்டினாலும்
என்ன வருமோ?
கஷ்டம் பாடு கண்ணீருண்டு
காண்பாயே
5. அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?
சாவின் கூறும் மாறிப்போகும்,
போதாதோ?
6. பாவி என்னை ஏற்றுக்கொள்ள
மாட்டேன் என்பாரே!
விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!