thudhipom hallelujah paadi

மகிமையின் ராஜனே மாட்சிமை தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

மகிமையின் ராஜனே மாட்சிமை தேவனே
தூயாதி தூயவரே துதிக்கு பாத்திரரே – 2
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபானை (இயேசுவை) போற்றி – 2
1. தண்ணீருல மூழ்கினபோதும்
நீங்க என்ன தூக்கி விட்டீங்க
நெருப்பா நா கடந்த போதும்
கருகாம காத்து கொண்டீங்க – 2
மனுஷங்க தலைமேல் ஏறிப்போனாலும்
நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க – 2
நெருக்கத்தில் இருந்து நான் கர்த்தரை நோக்கி கூப்பிட்டான்
அழுகுரல் கேட்டு என்னை விசாலத்தில் வைத்தார்
கர்த்தர் என் மேய்ப்பர் பயம் என்பதில்லை
மனிதனின் சூட்சிகளும் நிலை நிற்பதில்லை
அவர் சொன்னால் அதை செய்வார்
கரம் பிடித்தால் கரை சேர்ப்பார்
கர்த்தர் என் பக்கம் தோல்வி என்பதில்லை
2. மத்தவங்க மறந்த போதும்
உள்ளங்கையில் வரஞ்சிவச்சீங்க
என்ன நான் வெறுத்த போதும்
நீங்க என்ன அணைச்சிக்கொண்டீங்க – 2
எல்லாரும் தோக்கடிக்க முயற்சி செஞ்சாலும்
நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க – 2