Thothiram Seivene Ratchaganai

தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும்
1. அன்னை மரி சுதனை புல்மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை
2. கந்தை பொதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
வான பரன் என்னும் ஞான குணவானை
3. செம்பொன் னுருவானைத் தேசிகர்கள்
தேடும் குருவானை,
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி