thooyare thooya aaviye

தூயரே தூய ஆவியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தூயரே தூய ஆவியே
உம் பிரசன்னம் தான் வேண்டுமே
சுத்தரே பரிசுத்தரே
உம் ஆவியால் நிரப்பிடுமே
எங்கள் ஆராதனையில்
உம் நாமம் மகிமைபெற
உம் பிரசன்னம் தான் வேண்டுமே
பரலோகம் போல்
எங்க சபைகள் உம்மை துதிக்க
உம் ஆவியால் நிரப்பிடுமே
தூயரே தூய ஆவியே
உம் பிரசன்னம் தான் வேண்டுமே
சுத்தரே பரிசுத்தரே
உம் ஆவியால் நிரப்பிடுமே
Stanza:-
1. பாஷைகளாலே உம்மோடு பேச
அக்கினியாய் என்னை தொடவேண்டுமே
மேல்வீட்டு அறையில் இறங்கி வந்தீரே
இன்றும் உம் சபையில் வர வேண்டுமே
பரிசுத்தமாய் உம்மை தரிசிக்க
சுத்தமாய் என்னை மாற்றுமே
பரிசுத்தரை ஆராதிக்க
ஒரு விசை என்னை கழுவுமே
2. சிங்கசனத்தில் வீற்றிருப்பவரே
உம்மை போல் பரிசுத்தர் ஒருவரும் இல்லையே
கேருபீன் சேராபீன்கள் ஓய்வின்றி துதித்திடும்
துதிக்குப் பாத்திரர் நீர் ஒருவர் மட்டுமே
பரிசுத்தமாய் உம்மை தரிசிக்க
சுத்தமாய் என்னை மாற்றுமே
பரிசுத்தரை ஆராதிக்க
ஒரு விசை என்னை கழுவுமே
தூயரே தூய ஆவியே
உம் பிரசன்னம் தான் வேண்டுமே
சுத்தரே பரிசுத்தரே
உம் ஆவியால் நிரப்பிடுமே
Bridge:-
கணுக் காலளவு வேண்டாம்
முழங்கால் அளவு வேண்டாம்
நீச்சல் ஆழமும் வேண்டாம்
உம்மில் மூழ்கனுமே