Thooyarai Thuthithu Paaduvom christmas song lyrics

தூயரை துதித்துப் பாடுவோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தூயரை துதித்துப் பாடுவோம்
யூத ராஜனை புகழ்ந்து பாடுவோம்
பெத்தலை பாலனை போற்றி பாடுவோம்
சீரேசு நாதனை வாழ்த்தி பாடுவோம்
நம் மீட்டர் நம்மை மீட்க
ஏழைக்கோலமேற்று மண்ணில் வந்தார்
பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயா
நமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன்
பிறந்தார் மகிழ்வோம் ஹலேலூயா
நமக்காய் மனுவாய் நம் இம்மானுவேலன்
உன்னதத்திலிருக்கும் தேவனுக்கு மகிமை
பூமியினிலே சமாதானமும்,
மானிடர்மேல் பிரியமும் உண்டாகிடவே
ஏரோது மன்னனும் பயந்து மிகநடுங்கிட
எருசலேம் மக்களும் மிகவும் கலங்கிட
ராஜாவாய் வந்தாரே விண்ணின் வேந்தனே