Thooya Thooya Devanai Naam

தூய தூய தேவனை நாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
தூய தூய தேவனை நாம்‌
போற்றி யேற்றிப்‌ புகழ்ந்திடுவோம்‌
சரணங்கள்‌
ஸ்தோத்திரக்‌ கீதங்கள்‌ முழங்கிடுதே – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
பாவமாம்‌ சேற்றினில்‌ புரண்டதாம்‌ எம்மையே
பாசமாய்‌ இரங்கியே இரட்சித்தாரே __ தூய
நன்றியால்‌ உள்ளங்கள்‌ நிறைந்திடுதே – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
எத்தனை துன்பங்கள்‌ துயரங்கள்‌ பெருகினும்‌
இத்தனை கருணையால்‌ தாங்கிடும்‌ மா — தூய
ஆதரவளித்திடும்‌ ஆருயிரே – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
கோரமாய்ச்‌ சோதனை சூழ்ந்திடும்‌ வேளையில்‌
மாறா தம்‌ வார்த்தையால்‌ தேற்றுவாரே — தூய
பாடியே அகமகிழ்வோம்‌ – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
மேலோக பாக்கியம்‌ எண்ணிடும்‌ வேளையில்‌
மா பரமானந்தம்‌ பொங்கிடுதே — தூய
அன்பின்‌ மணாளனே வந்திடுவார்‌ – அல்லேலூயா!
அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே
பூரண பரிசுத்த வான்களோடேகியே
பரம சீயோனில்‌ நாம்‌ வாழ்ந்திடுவோம்‌ –தூய