thooya aaviye em thunaiyalare !

தூய ஆவியே எம் துணையாளரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

தூய ஆவியே எம் துணையாளரே !
தேவ ஆவியே எம் தேற்றரவாளரே !
வாரும் எங்கள் மீது வாருமே!
தாரும் உந்தன் வரங்கள் தாருமே!
வாரும் எங்கள் மீது வாருமே!
தாரும் உந்தன் கனிகள் தாருமே!
அன்பு அமைதி மகிழ்ச்சியினால்
எம்மை நிரப்புமே
நன்னயமும் நம்பிக்கையும்
எம்மில் நிலைக்கவே
தன்னடக்கம் பணிவு தாருமே
தளராத குணமும் தாருமே
கற்பு நெறி பரிவு தாருமே
கனிவோடு பொறுமை தாருமே
ஞானம் அறிவு மெய்யுணர்வால்
எம்மை நிரப்புமே
முன்மதியும் இறை பயமும்
என்றும் நிறையவே
இறை பற்று எம்மில் பெருகவே
எந்நாளும் ஆற்றல் தாருமே
வல்ல செயல்கள் புரிய வேண்டுமே
வளமோடு நலமும் தாருமே.
வெண்முகிலின் வடிவில் வந்த தூய ஆவியே
கன்மலையின் சிரசில் தங்கும் தூய ஆவியே
வெண்புறாவின் வடிவில் வந்த தூய ஆவியே
அக்கினி நாவின் உருவில் வந்த தூய ஆவியே
திடப்படுத்தும் தேவ ஆவியே
பெலப்படுத்தும் தூய ஆவியே
ஒளி கொடுக்கும் தேவ ஆவியே
வழிநடத்தும் தூய ஆவியே
குறையகற்றும் தேவ ஆவியே
குணமளிக்கும் தூய ஆவியே