Thoothar Paadidum Yaarivar

தூதர் பாடிடும் யாரிவர் துதியால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தூதர் பாடிடும் யாரிவர்
துதியால் நிறைந்திடும் யாரிவர்
இவரே நேசர் இவரே மீட்பர்
இவரே உலகின் இரட்சகர்
1. வாடையில் குளிர் வாடையில்
மகிழ்ந்து தூங்கிடும் யாரிவர்
மேடையில் புல் மேடையில்
மகிழ்ந்து தவழ்ந்திடும் யாரிவர்
ஆயர் பணிந்திடும் யாரிவர்
அறிஞர் வணங்கிடும் யாரிவர்
இயேசு ராஜா நம் இயேசு ராஜா
2. பாவி பாவம் நீக்க வந்த
தேவ ஆட்டு குட்டியோ
ஆதி கனியின் சாபம் நீக்கி
ஆவியின் கனி தருவாரா
பாவிக்காக மரிப்பாரோ
பரம கானான் சேர்ப்பாரோ
இயேசு ராஜா நம் இயேசு ராஜா