thirussapai vazhththu – Thiruchabai Vaazhthu

திருச்சபை வாழ்த்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திருச்சபை வாழ்த்து – Thiruchabai Vaazhthu
Paid Prime Membership on Primevideo.com
திருச்சபை வாழ்த்து
ஒரு வெண்கொற்றக் குடை நிழலில்
சோபித சந்தர உரோமை
உரோமை ராஜ பூபனே நமோ நமோ
ஒரு வெண்கொற்றக் குடை நிழலில்
1.உரோமை இராஜ பூபனே நமோ நமோ
திருச்சபையின் தலைவராக ஜெனித்த மாதவா
உம்மை நாடித் தேடி நமஸ்கரிக்கின்றோம்
1. உலகப் பாசம் ஒழிக்க சற்பிரசாதனே
உமையல்லாது துணையும் ஏது உதவி செய்குவாய்
உம்மை நாடித் தேடி நமஸ்கரிக்கின்றோம்
2.ஒரு வெண்கொற்றக் குடை நிழலில் – இவ்
வுலகாள் வேந்தன் வாழியவே
பொருதும் படையும் போருமின்றி
இறைவன் அன்பின் நிறைவாலே
மக்கள் மனமாள் வேந்தன் வாழியவே
1. பரமனின் பிரதி நிதியாமே எங்கள்
பாப்பரசரின் புகழ் இதுவாமே
ஒழுக்கமும் உண்மையும் உரைப்பாரே – அதில்
வழுவா வரம் அவர் துணையாமே
வெண் பொன்னிறம் அவர் கொடியாமே – ஒளிர்
மின்னலின் தூயதிவ் வரசாமே
மும்மகுடம் அவர் முடியாமே – வளர்
மூவுலகாள் அதிபதியாமே
3.சோபித சுந்தர உரோமை இராயனுக்கே
ஜே ஜே பாடுவோமே
1. இந்நில மீதினில் நன்மை ரூபனே
எத்திசையும் சத்தியம் காக்கும் சுத்த வீரனே
இயேசுபரன் ஆசி பெற்ற எங்கள் ஆயனே
2. மும்முடி சிரமதில் மின்னித் துலங்கிட
மூவகை ஆட்சி புரியும் மன்னர் மன்னனே
முதல்வ னருளால் உலகையாளும் எங்கள் மகிபனே
3. சுடரொளி ஜோதியாய் விளங்கும் அதிபனே
துய்யன் இயேசு தந்த வழியில் நடத்தும் தலைவனே
துதியும் புகழும் பெருக வாழி என்று பாடுவோம்
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});