thiruppatalkal – Thiruppaadalkal psalam19
திருப்பாடல்கள்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
திருப்பாடல்கள் – Thiruppaadalkal psalam19
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:1
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:2
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:3
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:4
மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:5
அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது; அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது; அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:6
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:7
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:8
ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:9
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:10
அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:11
தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:12
மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:13
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:14
thiruppatalkal – Thiruppaadalkal psalam19
vanangkal iraivanin matsimaiyai velippatuththukinrana; vanveli avartham kaikalin velaippattai vivarikkinrathu.
thiruppatalkal(sangkeethangkal) 19:1
ovvoru pakalum atuththa pakalukku asseythiyai arivikkinrathu; ovvoor iravum atuththa iravukku athaipparriya arivai vazhangkukinrathu.
thiruppatalkal(sangkeethangkal) 19:2
avarrukkus sollumillai, pessumillai; avarrin kural seviyil patuvathumillai.
thiruppatalkal(sangkeethangkal) 19:3
aayinum, avarrin arikkai ulakengkum senrataikinrathu; avai koorum seythi ulakin kataiyellaivarai ettukinrathu, iraivan angke kathiravanukku oru kootaram amaiththullar.
thiruppatalkal(sangkeethangkal) 19:4
manavaraiyilirunthu purappatum manamakanaip peala athu varukinrathu; panthayaththil ootum veeraraippeal athu than pathaiyil ootukinrathu.
thiruppatalkal(sangkeethangkal) 19:5
athu vanaththin oru munaiyilirunthu purappatukinrathu; athan pathai marumunai varaiyilum selkinrathu; athan veppaththirku maraivanathu onrumillai.
thiruppatalkal(sangkeethangkal) 19:6
aantavarin thirussattam niraivanathu; athu puththuyir alikkinrathu. aantavarin ozhungkumurai nampaththakkathu; eliyavarukku athu nyanam alikkinrathu.
thiruppatalkal(sangkeethangkal) 19:7
aantavarin niyamangkal sariyanavai; avai ithayaththai makizhvikkinrana. aantavarin kattalaikal olimayamanavai; avai kankalai olirvikkinrana.
thiruppatalkal(sangkeethangkal) 19:8
aantaraip parriya assam thooyathu; athu ennalum nilaiththirukkum. aantavarin neethinerikal unmaiyanavai; avai murrilum neethiyanavai.
thiruppatalkal(sangkeethangkal) 19:9
avai ponninum, pasum ponninum melaka vilaimikkavai; theninum thenataiyininru sinthum theli theninum inimaiyanavai.
thiruppatalkal(sangkeethangkal) 19:10
avarral atiyen essarikkappatukinren; avarraik kataippitippearkku mikuntha parisuntu.
thiruppatalkal(sangkeethangkal) 19:11
tham thavarukalai unarnthu kolpavar yartham? en ariyap pizhaikkaka ennai manniyum.
thiruppatalkal(sangkeethangkal) 19:12
melum, aanavamikkooritamirunthu um atiyanaik kaththarulum. avarkal ennai aattip pataikkathirukkattum; appozhuthu, nan masarriruppen; perumpizhai ethaiyum seyyathiruppen.
thiruppatalkal(sangkeethangkal) 19:13
en karparaiyum meetparumana aantavare! en vayin sorkal umakku erravaiyay irukkattum; en ullaththin ennangkal umakku ukanthavaiyay irukkattum.
thiruppatalkal(sangkeethangkal) 19:14