thirukkulame ezhunthituka arul – Thirukulamae Elunthiduga Arul

திருக்குலமே எழுந்திடுக அருள்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

திருக்குலமே எழுந்திடுக அருள் – Thirukulamae Elunthiduga Arul
பாடல் வரிகள் – வருகை பாடல்
திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம்
உன்னதரைப் போற்றுவோம் – 2
ஆகா.. சந்தோஷம் பெருகிடுதே
அவர் சந்நிதி காண்கையிலே – 2
1. ஆனந்தமுடனே அவர் திருமுன்னே (கூடிடுவோம்) – 2
ஆண்டவரே நம் கடவுள் என்று (பாடிடுவோம்) – 2
அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம் அவர்
மந்தையின் ஆடுகள் நாம்
2. இன்னிசை முழங்க இறைவன் வாசல் (நுழைந்திடுவோம்) – 2
பண்ணிசையோடு அவரது பீடம் (சூழ்ந்திடுவோம்) – 2
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம் அவர்
அன்பே நம்மை நடத்தும்