Thidan Kollungal Manathai song lyrics

திடன் கொள்ளுங்கள் மனதை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திடன் கொள்ளுங்கள் மனதை
திடப்படுத்திடுங்கள்
நானே தான் பயப்படாதிருங்கள்
கலக்கம் வேண்டாமே பயமும் வேண்டாமே
உனக்காக சிலுவையில்
யாவும் செய்து முடித்தேனே
உன்னோடு இருந்து
யுத்தம் செய்து முடிப்பேனே
1.பிதாவோடு எப்பொழுதும்
நான் தனித்து இருப்பதால்
அவர் என்னை தனியே
இருக்க விடவில்லையே
காத்திருந்து பெலனடைந்து
பெலத்தோடு போராடி
எதிரான ஆயுதத்தை முறித்து வென்றிடு
2.நான் உனக்கு சொல்லும்
போது கீழ்ப்படிந்திடு
வருத்தங்கள் கவலைகள் குறுக்கிட்டாலும்
ஆவேசம் அடையாமல் நான் உனக்குள்
தான் என்று விசுவாசமாயிருந்து
ஜெயம் பெற்றிடு
3.உபத்திரவம் உலகத்தில்
எப்பொழுதும் உண்டு
ஆனாலும் திடன்கொள்
நான் உலகை ஜெயித்தேனே
ஒரு முடிகூட என் அனுமதி இல்லாமல்
உதிர்வதில்லை என்று நிச்சயம் அறிந்திடு