Thida Asthiparam Kiristhu Yesuvae Lyrics

திட அஸ்திபாரம் கிறிஸ்து இயேசுவே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

திட அஸ்திபாரம் கிறிஸ்து இயேசுவே
பரீட்சிக்கப்பட்ட கல் அவரே
விலையேறப் பெற்ற கல் அவரே
மூலைக்கல்லும் அவரே-2
விசுவாசியே நீ பதறாதே
பதறாதே மகனே (மகளே) பதறாதே
அவரே உன் அஸ்திபாரம்
அவரே உன் எதிர்காலம்
1.இயேசு கிறிஸ்துவின் போதனைகள்
அப்போஸ்தலர் உபதேசங்கள்
அதை நீ கேட்டு வாழ்ந்திடு
அதுவே உன் அஸ்திபாரம்
2.இயேசு சோதனை ஜெயித்திட்டாரே
நானும் அவர் போல ஜெயித்திடுவேன்
என்றும் நீ அதை விசுவாசித்தால்
அதுவே உன் ஜெயம் ஜெயமே-
3.ஒரே பேரான குமாரனாக
தாழ்த்தி கீழ்ப்படிந்து சித்தம் செய்தார்
விலையேறப்பெற்ற கல்லுமானதால்
விசுவாசித்தால் வெட்கமில்லையே