theyvam ivar theyvam ivar – Deivam Evar Deivam Evar

தெய்வம் இவர் தெய்வம் இவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தெய்வம் இவர் தெய்வம் இவர் – Deivam Evar Deivam Evar
பல்லவி
தெய்வம் இவர், தெய்வம் இவர்,-எங்கள் குல
தெய்வம் இவர் தானே.
அனுபல்லவி
கைவருந்தாமல் உலகம் கற்பித்த தெய்வம் இவர்
கர்த்தத்துவங்கள், நித்திய கர்த்தர் என்னும் தெய்வம் இவர்;-தெய்
சரணங்கள்
1. எல்லாவற்றையும் அமைத்த வல்லாண்மை தெய்வம் இவர்
பல்லுயிர்க்கும் ஈவளிக்கும் பாக்யமிகும் தெய்வம் இவர்; – தெய்
2.சந்திரர்க்கும், சூரியர்க்கும், ‘அந்தரர்க்கும் தெய்வம் இவர்,
சுந்தரச் சீயோன் மலையில் தோத்தரிக்கும் தெய்வம் இவர்; -தெய்
3.கேரூபின் மீதேறி வல சாரிவரும் தெய்வம் இவர்;
ஆறு லட்சம் “கானகர் ஆராதனை செய் தெய்வம் இவர்; -தெய்
4.காலா காலங் கடந்த காட்சி இவர், மாட்சி இவர்,
ஆலேலூயா ‘அமரர் அஞ்சலி செய் தெய்வம் இவர்-தெய்