thevane nan eththanai – Devanae Naan Eththanai

தேவனே நான் எத்தனை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனே நான் எத்தனை – Devanae Naan Eththanai
1.தேவனே, நான் எத்தனை
பாவப் பாதகங்களைச்
செய்துவந்தேன் என்று நீர்
நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர்.
2.ஐயோ! பாவக் குற்றத்தால்
கெட்டுப்போனேன், ஆதலால்
நித்தம் வாடி நோகிறேன்,
துக்கத்தால் திகைக்கிறேன்.
3.உள்ளம் என்னை உணர்த்த
துன்பம், துயர் மிஞ்சிற்றே,
ஆவியும் கலங்கிற்றே.
கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே
4.வெட்கம் கொண்ட அடியேன்
துக்கமுள்ளோனாய் வந்தேன்;
நாதா, என்னைச் சாலவும்
தேற்றி மன்னித்தருளும்.