thevane kapparrum – Devaney kappattum

தேவனே காப்பாற்றும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவனே காப்பாற்றும் – Devaney kappattum
தேவனே காப்பாற்றும் தேவனே காப்பாற்றும்
உம்மையே நம்பி இருக்கிறேன்
என் தேவனே உம்மையே நம்பி இருக்கிறேன் -2
1.என் மூச்சும் நீரே என் வாழ்க்கையும் நீரே
என் பெலனும் என் கேடகமும் நீரே
உம்மையே நம்பி இருக்கிறேன்
என் தேவனே உம்மையே நம்பி இருக்கிறேன்
1.நான் நம்பின மனிதர்கள் எல்லாம் எல்லோரும்
என் நம்பிக்கைக்கு விரோதியானார்கள்
நான் நம்பின செல்வங்கள் எல்லாமே
என் நம்பிக்கைக்கு தூரமாயிட்டே
2.நான் நம்பின வேலைகள் எல்லாமே
என் நம்பிக்கையை கேள்வி கேட்டன
நான் நம்பின காலங்கள் எல்லாமே
என் நம்பிக்கைக்கு துக்கமாயிட்டே
3.என் தேவனே என்னை நீர் நினைத்தருளும்
என் நம்பிக்கையின் நங்கூரமே
என் மீட்பராய் உயிரோடு எழுந்தீரே
என்னையும் உயிர்ப்பித்தீரே