Thevai Nirainthavar Yesu Deva

தேவை நிறைந்தவர் இயேசு தேவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வல்லமை தந்திடும்
பல்லவி
தேவை நிறைந்தவர் இயேசு தேவா
வல்லமை தந்திடுமே – (2)
அனுபல்லவி
தேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமை – (2)
வேளையில் தந்திடுமே – இந்த
வேளையில் தந்திடுமே . . . – (2)
சரணம்
நாடுகள் அனைத்திலும் அமைதியே இல்லை
வல்லமை தந்திடுமே – (2)
திறப்பின் வாசல் நின்று
களைப்பின்றி புலம்பபிட – (2)
எங்களை எழுப்பிடுமே – தேவா
வல்லமை தந்திடுமே – (2) – தேவை
தேவை மிக்க ஒரு நாட்டினைத் தந்தீர்
வல்லமை தந்திடுமே – (2)
எத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள் – (2)
‘கர்த்தரே தெய்வம்’ என்றே – காட்ட
வல்லமை தந்திடுமே – (2) – தேவை
நித்திய நாட்டிற்கு மக்களைச் சேர்க்க
வல்லமை தந்திடுமே – (2)
நிலையில்லா உலகில்
நிலைத்திடும் சேமிப்பு – (2)
ஆத்துமாக்கள் மட்டுமே – தேவா
வல்லமை தந்திடுமே – (2) – தேவை