Theva paalan yesu raajan

தேவபாலன் இயேசு ராஜன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தேவபாலன் இயேசு ராஜன்
பாரில் இன்று உதித்த நல்ல நாளிது
மனமகிழ்ந்து வாழ்த்து பாடி
வேந்தன் இயேசு நாமம் என்றும்
போற்றுவோம்
நாமெல்லாம் துதித்திடும் (2)
நல்ல நாள் இன்றுதான் (2)
1.அல்லி ராவிலே வெள்ளையடியிலே
மாடடையிலே மகிமையுடனே
எங்கள் தேவன் வந்துதித்தார்(2)
பாவ சாபம் யாவும் நீங்கும்
அவர் பாதம் புவியில் பட்டால்
உண்மையோடு அன்பர் பாதம்
நாடி ஓடுவோம்
2.மந்தை மேய்ப்பர்கள் சிந்தை கலங்கவே
தேவபாலனை கண்டு விரையவே
ராஜ ராஜன் வந்துதித்தார் (2)
துன்ப சாத்தான் வீழ்ந்திட
இன்ப இயேசு வந்துதித்தார்
உண்மையோடு அன்பர் பாதம்
நாடி ஓடுவோம்