theninum iniya keethangkal isaiththu palanaip pukazhnthituvoom

தேனினும் இனிய கீதங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

தேனினும் இனிய கீதங்கள் இசைத்து பாலனைப் புகழ்ந்திடுவோம்
கடவுளின் திருமகன் தேடியே வந்தார் கூடிநாம் மகிழ்ந்திடுவோம்
தினம் கொண்டாடுவோம் Happy Christmas
பண்பாடுவோம் Merry Christmas
பாலனின் பாதையில் பாரினில் நாமும் தீபமாய் ஒளிர்ந்திடுவோம்
அவர்தரும் அமைதி அகிலத்தில் நிறைய யாவரும் பகிர்ந்திடுவோம்
1.பால்வெளி நிலவு வயல்வெளி குளிரு வாழ்த்தொலி கேட்கிறதே
வானக தேவன் வார்த்தையாம் இறைவன் மாமரி மகனானார்
மாசில்லா மனுவுரு பாருங்கள்
மாபரன் அழகுரு காணுங்கள்
மானுட மீட்பு அவரிடம்தானே அவரையே நாடிடுவோம்-2
2.கடைநிலை மாந்தர் உயர்நிலை அடையும்
நம்பிக்கை கரம் இதுவே
காரிருள் சூழ்ந்த மானிடர் வாழ்வில்
பேரொளி நிதம் அதுவே
கோமகன் அருகினில் வாருங்கள்
குறையில்லாப் பேரருள் காணுங்கள்
நாளைய பொழுதின் விடியல் நாமே ஒன்றாய் முழங்கிடுவோம்-2